Posts

Showing posts from June, 2012
                      கண்தானம் பெற்றெடுத்த அன்னையும் கற்றுத்தந்த தந்தையும் காதல் சொல்லும் தோழியும் ஊற்றெடுக்கும் அருவியும் பொங்கிடும் கங்கையும் காலை சூரியனும் நிலவு வெளிச்சமும் அந்தி மழையும் பனித் துளியும் பரந்திருக்கும் பூமியும் பார்க்க முடியாமல் செய்துவிட்டான் - என் கண்ணின் மணியில் - கடவுள் குற்றம் இழைத்துவிட்டான்...! மண்ணில் சிறந்த - மாமனிதனையும் படைத்துவிட்டான் கண்ணைத் தானம் தரும் - கலையை அவனுக்கு வித்திட்டான்! மாமனிதன் ஒருவன் - கண்தானம் செய்ததால் என்வானம் திறந்திருச்சி இன்று! பொன்போன்ற கண்ணைப் படைத்த ஆண்டவனுக்கு - நன்றி சொல்வோம்! கண்ணைத் தானம் கொடுத்த - மாமனிதனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்க - இறைவனிடம் வேண்டிச் செல்வோம்...!                                              - ஜெ.ராஜ்குமார்