Posts

Showing posts from 2010

என் இரண்டாம் கவிதை புத்தகம்...!

மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்! - இந்த நூலின் தலைப்பு! உங்கள் மனதைத் திறக்கப் போகும் , என் இரண்டாம் கவிதைப் புத்தகம் அச்சாகிவிட்டது. வரும் ஜனவரி 14ஆம் தேதி 2012ல்,சென்னை புத்தகக் கண்காட்சியில், மணிமேகலை பிரசுரம் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளிவர உள்ளது. அனைவரும் வாருங்கள், வந்து விழாவை சிறப்பியுங்கள். சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டும் , மனிதனின் மனதின் ஒத்த செயல்களைச் சுட்டி காட்டவும் , இந்த புத்தகம் உயிர் பெற்றுள்ளது. உள்ளத்தால் படியுங்கள்! உண்மையாய் உலா வாருங்கள்!!! உங்கள் உள்ளத்தைத் தூய்மை படுத்துங்கள்!!! வாழ்க தமிழ்! வளர்க பாரதம்!! அன்புடன் ஜெ.ராஜ்குமார் 9442457706

அவளிடம்

தென்றல் அவள் பக்கம் சாய்ந்து கேட்கிறது உன் வெட்கம் கொஞ்சம் கடன் தா என்று ! மின்னல் அவள் மனதை தொட்டு கேட்கிறது எப்படி மனதை படம்பிடிப்பதென்று ! நிலவு அவள் முகம்பார்த்து கேட்கிறது எப்படி முழுநிலவாய் முழுநேரம் இருப்பதென்று ! சூரியன் அவள் சுகம் பார்த்து கேட்கிறது கோபத்திலும் எப்படி அழகாய் தோன்றுவதென்று ! வீசுகின்ற பெருங்காற்று பாய்ந்து வருகிற அலைகள் ஓயாமல் பெய்யும் அடை மழை பொங்கிவரும் தீக்குமிழி பாரம் தாங்காமல் அதிரும் பூமிதாய் சுட்டெரிக்கும் வெயில் மனிதனின் ஆசை - இவையெல்லாம் அவளிடம் கேட்கிறது பொறுமையை கடைபிடிப்பது எப்படி என்று !

பயணம்-சந்தோஷம்

பணிச்சாரலில் நனைகிறேன் - உன் மெல்லிய விரல்கள் என்னை தழுவுவதாய் நினைக்கிறேன் ! குலிரெடுத்து நடுங்குகிறேன் -நீ என்னை குளுக்குவதுபோல் உணர்கிறேன் பச்சைபசுமை எங்கெங்கும் - அதுபோல் நீ என்னில் இருக்கிறாய் என்றென்றும் ! கொட்டுகின்ற அருவியை பார்த்தால் - உன்னில் ஊற்றெடுக்கும் அன்பை நான் பார்க்கிறேன் ! நெடுந்தூரம் பயணங்கள் மேற்கொண்டேன் - நீ என்னில் இருப்பதாய் எண்ணி ! சுற்றி பார்த்த இடமெல்லாம் சந்தோஷம் -ஏனெனில் அதில் உன் முகம் பார்த்தேன் ஒவ்வொன்றிலும் ! கடவுளிடம் வேண்டினேன் - இதை விட சந்தோஷம் வேறு இல்லை என்று !

அறுபது வயது குழந்தை

அறுபது வயது கிழம்போல் இருப்பாய் ஆகாயத்தை தொட்டுவிட நினைப்பாய் அல்வா துண்டை பார்த்தால் நாவில்-எச்சை ஊருமடா சக்கரை நோய் இருப்பதை எண்ணி நாவும்-உள்ளே போய்விடுமடா ! பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தால் - பழய குரும்பை செய்ய தோனுமடா ! தடியடி வைத்து நடந்தாலும் தாடி நிறைய வந்தாலும் முடிக்கு டை அடிப்பதை மறப்பதில்லை ! முகத்துக்கு மேக்கப் போடுவதை தவிர்ப்பதில்லை ! சிலைபோல் வீட்டில் இருந்தாலும் மலைபோல் சாப்பிடுவதை மறந்ததில்லை பேச்சுக்கள் குறைந்துவிட்டதுதான் - ஆனால் எண்ணங்கள் குறையவில்லையே ! முதுமையும் அடைந்துவிட்டதுதான் - அனால் இளமையின் துடிப்பும் இருக்கிறதே இன்னும் ! கிரிகெட் விளையாட தோனுகிறது கூடைபந்து விளையாட தோனுகிறது கால்பந்தை உதைக்க தோனுகிறது பம்பரத்தை சுத்த தோனுகிறது கோலியை அடிக்க தோனுகிறது கில்லியில் இறங்க தோனுகிறது கபடியில் கலம்கொள்ள தோனுகிறது காத்தாடி விட ஆசைவருகிறது தண்டவாலத்தில் நடக்க தோனுகிறது ! தண்ணீரில் நீச்சல் அடிக்க தோனுகிறது தரையில் மனலோடு விளையாட தோனுகிறது ! பட்டாம்பூச்சியின் வண்ணங்களை - கையில் ஏந்த தோனுகிறது...! பார்க்குமிடமெல்லாம் கால்கள் - நடமாட தோனுகிறது புதியபாதை போட உள்ளம் தேடுகிற

வாழ்க்கை பயணம்

கருவறையிலிருந்து கல்லறைக்கு போகும் வழியில் வாழ்ந்து விட்டு போகும் வாழ்க்கை...!

முழுமையான பெண் நீ!

இது என் முதல் படைப்பு. முழுமையான படைப்பு. காதல் இருக்கும், கடமை இருக்கும், நல்ல கருத்தும் இருக்கும். சுகமான ஒரு சுவையும் கொடுக்கும்...! ஒவ்வொரு கவிதைக்கு ஏற்றாற்போல் படங்கள் அமைத்துள்ளேன். பிப்ரவரி 2010 , இந்த கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது. order By: connectraj25@gmail.com Cell: +91 9019049437

காதல் கொண்டேன்

காதல் கொண்டேன் பெண்ணே - உன்னை கண்ட முதல் நாளே ! கண்கள் உனைதேடி அலையும் அதுதானே கனவுலகின் காதலியே நினைவுலகில் வருவதெப்போ ! பிரியமுடன் வருவாயா பிரிய முத்தம் தருவாயா ! மழை பொழியுது மனம் வீசுது மலர்களெல்லாம் பூக்கிறது பூக்கிறது உன் வருகைக்காக காத்து கிடக்கிறது ! தினந்தோறும் மனம் தேடும் என் காதலி நீ தானே ! என் இதயம் துடிப்பது - உன் நினைவின் அலைவரிசையிலே...! உன்னோடு வாழ்ந்து நீ பெற்ற இன்பம் நான் பெற வேண்டும் என்னோடு வாழ்ந்து நீ வேண்டிய வாழ்க்கை நான் தர வேண்டும் ! கண்களுக்குள் நீதானே... கடைசிவரை காப்பேனே...! கண்மணியே நீ வர காத்திருக்கு மனம் - என் வாசல் திறந்திருக்கு தினம் !

வானம்

தொடமுடியா தூரத்தில் நீ தொட்டுவிடும் தூரத்தில் கண்களுக்கு இணையில்லா மேக கூட்டம் உன்னிடம் - மழையெல்லாம் தந்திடுவாய் இந்த பூமியிடம் பாதுகாப்பு கவசம் நீ - இந்த பூமிக்கு கிடைத்த நீலகண்ணன் நீ பகலெல்லாம் தாங்கிடுவாய் சூரியனை இரவெல்லாம் ஜொலித்துடுவாய் நிலவோடு ஏழு வண்ண வானவில்லை கொண்டவன் நீ எண்ணிக்கையில்லா நட்சத்திரங்களுக்கு சொந்தம் நீ கண்சிமுட்டுவாய் மின்னல் என்று சத்தம் போடுவாய் இடி என்று மழை கொட்டுவாய் கருணை என்று நம்பிக்கை ஊட்டுவாய் ! - முயற்சி எதுவரை என்றால் - வானம் வரை என்று நம்பிக்கை ஊட்டுவாய் ! - வெற்றி எதுவரை என்றால் - வானம் வரை என்று நம்பிக்கை ஊட்டுவாய் ! - வாழ்க்கை எதுவரை என்றால் - வானம் வரை என்று !

கனவு

தூங்கி எழ நினைத்தாலும் - எனை தூக்கத்தில் ஆழ்த்தும் என் கற்பனை திறனை அதிகரிக்கும் - நான் அறியாமலேயே ! கண்ணை மூட கற்றுகொண்ட நான் கனவை அடக்க கற்றுகொள்ளவில்லை - அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான் - என் கற்பனை திறனை வளர்க்கிறதே ! முந்தி அடித்து முகம் சோர்ந்து அவசர உலகத்தில் அலைந்து திரிந்து வந்து படுத்தால் - உங்கள் கண்களுக்கு விருந்தாகவும் - உங்கள் கற்பனைக்கு மருந்தாகவும் - கனவுகள் தினம் காட்சியளிக்கும்...! எட்ட முடியா வாழ்க்கையை கூட தொட்டுவிட முடியும் கனவால் விட்டுபோன உறவைகூட ஒட்டி பார்க்க முடியும் கனவால் நீ சத்தியமாய் நம்பினால் - சிலநேரம் கனவுகள்கூட நினைவாகிவிடும்...!