வானம்

தொடமுடியா தூரத்தில் நீ
தொட்டுவிடும் தூரத்தில் கண்களுக்கு
இணையில்லா மேக கூட்டம் உன்னிடம் -
மழையெல்லாம் தந்திடுவாய் இந்த பூமியிடம்
பாதுகாப்பு கவசம் நீ - இந்த
பூமிக்கு கிடைத்த நீலகண்ணன் நீ
பகலெல்லாம் தாங்கிடுவாய் சூரியனை
இரவெல்லாம் ஜொலித்துடுவாய் நிலவோடு
ஏழு வண்ண வானவில்லை கொண்டவன் நீ
எண்ணிக்கையில்லா நட்சத்திரங்களுக்கு சொந்தம் நீ
கண்சிமுட்டுவாய் மின்னல் என்று
சத்தம் போடுவாய் இடி என்று
மழை கொட்டுவாய் கருணை என்று
நம்பிக்கை ஊட்டுவாய் ! -
முயற்சி எதுவரை என்றால் - வானம்
வரை என்று
நம்பிக்கை ஊட்டுவாய் ! -
வெற்றி எதுவரை என்றால் - வானம்
வரை என்று
நம்பிக்கை ஊட்டுவாய் ! -
வாழ்க்கை எதுவரை என்றால் - வானம்
வரை என்று !

Comments

Popular posts from this blog

என் இரண்டாம் கவிதை புத்தகம்...!

பயணம்-சந்தோஷம்