அறுபது வயது குழந்தை

அறுபது வயது கிழம்போல் இருப்பாய்
ஆகாயத்தை தொட்டுவிட நினைப்பாய்
அல்வா துண்டை பார்த்தால் நாவில்-எச்சை ஊருமடா
சக்கரை நோய் இருப்பதை எண்ணி நாவும்-உள்ளே போய்விடுமடா !
பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தால் -
பழய குரும்பை செய்ய தோனுமடா !
தடியடி வைத்து நடந்தாலும்
தாடி நிறைய வந்தாலும்
முடிக்கு டை அடிப்பதை மறப்பதில்லை !
முகத்துக்கு மேக்கப் போடுவதை தவிர்ப்பதில்லை !
சிலைபோல் வீட்டில் இருந்தாலும்
மலைபோல் சாப்பிடுவதை மறந்ததில்லை
பேச்சுக்கள் குறைந்துவிட்டதுதான் - ஆனால்
எண்ணங்கள் குறையவில்லையே !
முதுமையும் அடைந்துவிட்டதுதான் - அனால்
இளமையின் துடிப்பும் இருக்கிறதே இன்னும் !
கிரிகெட் விளையாட தோனுகிறது
கூடைபந்து விளையாட தோனுகிறது
கால்பந்தை உதைக்க தோனுகிறது
பம்பரத்தை சுத்த தோனுகிறது
கோலியை அடிக்க தோனுகிறது
கில்லியில் இறங்க தோனுகிறது
கபடியில் கலம்கொள்ள தோனுகிறது
காத்தாடி விட ஆசைவருகிறது
தண்டவாலத்தில் நடக்க தோனுகிறது !
தண்ணீரில் நீச்சல் அடிக்க தோனுகிறது
தரையில் மனலோடு விளையாட தோனுகிறது !
பட்டாம்பூச்சியின் வண்ணங்களை - கையில்
ஏந்த தோனுகிறது...!
பார்க்குமிடமெல்லாம் கால்கள் - நடமாட தோனுகிறது
புதியபாதை போட உள்ளம் தேடுகிறது
மொத்ததில் -
குழந்தை பருவத்துக்கே போனதுபோல் தோனுகிறது...!

Comments

Popular posts from this blog

முழுமையான பெண் நீ!

அவளிடம்